தூத்துக்குடி: வீடு புகுந்து ரூ.4 லட்சம் நகை திருட்டு- மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

28 Aug 2026 www.thinathulir.com

தூத்துக்குடி: வீடு புகுந்து ரூ.4 லட்சம் நகை திருட்டு- மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

Thinathulir Reporter
தூத்துக்குடி: வீடு புகுந்து ரூ.4 லட்சம் நகை திருட்டு- மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடி அருகே வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், பீரோவில் இருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான 4 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, குற்றவாளியை தேடி வருகின்றனர்.தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள நடுக்கூட்டன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி கல்யாணி (61). கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி இரவு, வீட்டில் காற்று வருவதற்காக கதவை திறந்து வைத்திருந்தனர். பின்னர் குடும்பத்தினர் அனைவரும் வீட்டின் வராண்டாவில் படுத்து தூங்கியுள்ளனர்.நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர், பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள 4 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.இந்த திருட்டு சம்பவம் குறித்து கல்யாணிக்கு ஆகஸ்ட் 26-ம் தேதிதான் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜூடி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும், திருட்டில் ஈடுபட்ட நபரை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.