தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.22,970 பறிமுதல்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
18 Jul 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 18 Jul 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.22,970 பறிமுதல்

தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.22,970 பறிமுதல்

தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தின் சிவில் சப்ளை (வட்ட வழங்கல்) பிரிவில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.துணைக் கண்காணிப்பாளர் பீட்டர் பால்துரை தலைமையில் நடைபெற்ற இந்த சோதனையில், உரிய ஆவணங்கள் அல்லது கணக்குப் பதிவுகள் இல்லாமல் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் ரூ.22,970 பணம் கைப்பற்றப்பட்டது.இதையடுத்து, அந்தப் பணம் தொடர்பாக சிவில் சப்ளை பிரிவு ஊழியரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் தூத்துக்குடி அரசு அலுவலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.