தொடர் விடுமுறை நிறைவு: பஸ், ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
05 Oct 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 05 Oct 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தொடர் விடுமுறை நிறைவு: பஸ், ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது

தொடர் விடுமுறை நிறைவு: பஸ், ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது

தமிழகத்தில் பள்ளிகளுக்கான காலாண்டுத் தேர்வுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து தொடர் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதையொட்டி பலர் குடும்பத்துடன் வெளியூர்களுக்கும், சொந்த ஊர்களுக்கும் சென்றிருந்தனர். குறிப்பாக சென்னையில் வசிப்பவர்கள் மதுரை, நெல்லை, திருச்சி, பெங்களூரு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விடுமுறையை கழிக்க சென்றனர். இதனுடன் காந்தி ஜெயந்தி மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைத்தது. இந்த தொடர் விடுமுறை நேற்று முடிவடைந்த நிலையில், இன்று (திங்கட்கிழமை) பள்ளிகள் வழக்கம்போல் திறக்கின்றன. இதனால் சொந்த ஊர்களில் இருந்து தங்கள் வசிப்பிடங்களுக்கு திரும்புவதற்காக நேற்று காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் புறப்பட்டனர். குழந்தைகளுடன் பெரிய அளவிலான உடைமைகளை எடுத்துக்கொண்டு ஏராளமானோர் பஸ் மற்றும் ரெயில் நிலையங்களுக்கு வந்ததால் அங்கு கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மதுரை ரெயில் நிலையத்திலும் நேற்று வழக்கத்தைவிட பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. சென்னை, பெங்களூரு, கோவை, நெல்லை, குமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக ஏராளமானோர் ரெயில் நிலையத்தில் குவிந்தனர். மதுரையில் இருந்து சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக முன்பதிவில்லாத பெட்டிகளில் இடம் பிடிக்க பயணிகள் முண்டியடித்தபடி ரெயில்களில் ஏறினர். சொந்த ஊர்களில் இருந்து திரும்பியவர்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு செல்வதற்காக ஒவ்வொரு ரெயிலிலும் கூட்டமாக பயணித்தனர். ரெயில் நிலையத்தைப் போலவே மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம், ஆம்னி பஸ் நிலையம், ஆரப்பாளையம் உள்ளிட்ட பஸ் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. பயணிகளின் வசதிக்காக மதுரையில் இருந்து சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கும், நெல்லை, குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும் வழக்கத்தைவிட கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இருப்பினும், தொடர் விடுமுறை நிறைவடைந்ததால் பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் தொடர்ந்து அதிகமாக காணப்பட்டது. குடும்பம் குடும்பமாக பயணிகள் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்பிச் சென்றனர்.