தங்கையின் உயிரிழப்புக்கு பழிவாங்கிய வாலிபர்: தனியார் நிறுவன ஊழியர் சரமாரியாக வெட்டிக்கொலை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
14 Nov 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 14 Nov 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தங்கையின் உயிரிழப்புக்கு பழிவாங்கிய வாலிபர்: தனியார் நிறுவன ஊழியர் சரமாரியாக வெட்டிக்கொலை

தங்கையின் உயிரிழப்புக்கு பழிவாங்கிய வாலிபர்: தனியார் நிறுவன ஊழியர் சரமாரியாக வெட்டிக்கொலை

காஞ்சிபுரம் அருகே தங்கையின் தற்கொலைக்கு காரணமானதாகக் கருதிய தனியார் நிறுவன ஊழியரை, அவரது சகோதரர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட செவிலிமேடு பகுதியைச் சேர்ந்தவர் மீரான் (28). ஏற்கனவே திருமணமான இவர், காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் பணியாற்றிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சவுந்தர்யா என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப் பழக்கம் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் தங்களது குடும்பத்தினரை விட்டு பிரிந்து சென்றுள்ளனர். பின்னர் இருதரப்பு குடும்பத்தினரும் அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, மீரான் மற்றும் சவுந்தர்யாவை பிரித்து வைத்தனர். இதனால் மனமுடைந்த சவுந்தர்யா, சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தங்கையின் மரணத்தால் ஆத்திரமடைந்த அவரது சகோதரர் நந்தகுமார் (25), நேற்று காஞ்சிபுரம் அருகே கோளிவாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்த மீரானை வழிமறித்துள்ளார். அப்போது அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார், நந்தகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் விசாரணையில், தனது தங்கையின் மரணத்துக்கு மீரான்தான் காரணம் எனக் கருதி அவரைக் கொலை செய்து பழிவாங்கியதாக நந்தகுமார் தெரிவித்தது தெரியவந்துள்ளது.