தங்கம் விலை மீண்டும் உயர்வு; சென்னையில் சவரன் ரூ.1,13,760 ஆக அதிகரிப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
15 Aug 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 15 Aug 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தங்கம் விலை மீண்டும் உயர்வு; சென்னையில் சவரன் ரூ.1,13,760 ஆக அதிகரிப்பு

தங்கம் விலை மீண்டும் உயர்வு; சென்னையில் சவரன் ரூ.1,13,760 ஆக அதிகரிப்பு

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று மீண்டும் விலை அதிகரித்துள்ளது.நேற்று முன்தினம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.160 உயர்ந்து ரூ.1,13,760 ஆக இருந்தது. அதன்பிறகு நேற்று காலை தங்கத்தின் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டது. அப்போது ஒரு சவரனுக்கு ரூ.1,440 குறைந்து, ரூ.1,12,320-க்கு விற்பனை செய்யப்பட்டது.ஆனால், அதே நாளில் மாலை நேரத்தில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்தது. ஒரு சவரனுக்கு ரூ.1,280 மற்றும் ஒரு கிராமுக்கு ரூ.160 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும், ஒரு கிராம் ரூ.14,200-க்கும் விற்பனையானது.இந்நிலையில், இன்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.160 அதிகரித்து ரூ.1,13,760 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.14,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதற்கிடையில், வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2.55 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.