தங்கம் விலை மீண்டும் உயர்வு; இன்றைய விலை விவரம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
18 Aug 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 18 Aug 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தங்கம் விலை மீண்டும் உயர்வு; இன்றைய விலை விவரம்

தங்கம் விலை மீண்டும் உயர்வு; இன்றைய விலை விவரம்

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்ததால், ஒரு சவரன் ரூ.1,14,160 என்ற விலையில் விற்பனையானது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.50 உயர்ந்து ரூ.14,270 ஆக இருந்தது.இந்நிலையில், இன்றும் தங்கத்தின் விலையில் உயர்வு பதிவாகியுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.160 அதிகரித்து, தற்போது ஒரு சவரன் ரூ.1,14,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமின் விலை ரூ.20 உயர்ந்து ரூ.14,290 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2.55 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.