தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,800 சரிவு... சென்னையில் இன்றைய விலை நிலவரம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
02 Sep 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 02 Sep 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,800 சரிவு... சென்னையில் இன்றைய விலை நிலவரம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,800 சரிவு... சென்னையில் இன்றைய விலை நிலவரம்

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. சென்னையில் முன்தினம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.14,370-க்கும், ஒரு சவரன் ரூ.1,14,960-க்கும் விற்பனை செய்யப்பட்டது.நேற்று காலையில் சவரனுக்கு ரூ.120 உயர்ந்த தங்கத்தின் விலை, மாலையில் ரூ.1,680 குறைந்தது. இதனால் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,560 சரிந்து ரூ.1,13,400-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.195 குறைந்து ரூ.14,175-க்கும் விற்பனையானது.இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை மேலும் சரிந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,800 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.225 குறைந்து ரூ.13,950 ஆக உள்ளது.வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2.50 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.