தங்கம் விலை சற்று குறைவு.. இன்றைய விலை நிலவரம் என்ன?
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
25 Aug 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 25 Aug 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தங்கம் விலை சற்று குறைவு.. இன்றைய விலை நிலவரம் என்ன?

தங்கம் விலை சற்று குறைவு.. இன்றைய விலை நிலவரம் என்ன?

கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, இன்று சற்று குறைந்துள்ளது. கடந்த 14-ந்தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.14,200-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர் தங்கத்தின் விலை படிப்படியாக அதிகரித்தது.நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,030-க்கு விற்பனையானது. அதேபோல், ஒரு சவரனுக்கு ரூ.640 அதிகரித்து, ரூ.1,20,240-க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை சிறிதளவு குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ரூ.15,010-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனின் விலை ரூ.160 குறைந்து, ரூ.1,20,080 ஆக உள்ளது.வெள்ளியின் விலையிலும் இன்று சரிவு காணப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.265-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2 லட்சத்து 65 ஆயிரமாக உள்ளது.