தங்கம் விலை அதிரடி சரிவு: சென்னையில் இன்றைய விலை நிலவரம்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

05 Sep 2026 www.thinathulir.com

தங்கம் விலை அதிரடி சரிவு: சென்னையில் இன்றைய விலை நிலவரம்

தங்கம் விலை அதிரடி சரிவு: சென்னையில் இன்றைய விலை நிலவரம்

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், இன்று மீண்டும் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. முன்னதாக, நேற்று முன்தினம் தங்கத்தின் விலை திடீரென உயர்ந்தது. அன்றைய தினம் ஒரு சவரனுக்கு ரூ.2,320 அதிகரித்து ரூ.1,13,920 ஆகவும், ஒரு கிராமுக்கு ரூ.290 உயர்ந்து ரூ.14,240 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.இதையடுத்து, நேற்றும் தங்கம் விலை உயர்ந்தது. சவரனுக்கு ரூ.960 அதிகரித்து ரூ.1,14,880-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.14,360-க்கும் விற்பனையானது.இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலையில் அதிரடி சரிவு ஏற்பட்டுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.1,360 குறைந்து ரூ.1,13,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் ரூ.170 குறைந்து ரூ.14,190 ஆக விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலையில் மாற்றமில்லை.ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.