தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.1,13,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.45 குறைந்து ரூ.14,125-ஆக இருந்தது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை மேலும் சரிவை சந்தித்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.680 குறைந்துள்ளது. இதனால் இன்று ஒரு சவரன் ரூ.1,12,320-க்கும், ஒரு கிராம் ரூ.14,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையில், வெள்ளி விலையில் தொடர்ந்து 4-வது நாளாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.