டைகர் ஷெராப் கார் மீது துப்பாக்கிச்சூடு: 4-வது நபர் கைது
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
20 Oct 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 20 Oct 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

டைகர் ஷெராப் கார் மீது துப்பாக்கிச்சூடு: 4-வது நபர் கைது

டைகர் ஷெராப் கார் மீது துப்பாக்கிச்சூடு: 4-வது நபர் கைது

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் கார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தொடர்பாக, ஹரியானா மாநிலம் சோனிபட்டைச் சேர்ந்த சமீர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே ராஜஸ்தானில் மூன்று பேர் பிடிபட்ட நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது நான்காக அதிகரித்துள்ளது. மும்பையின் ஜூஹு பகுதியில் உள்ள புஷ்பா பார்க் அருகே நடிகர் டைகர் ஷெராப் சென்ற கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கால்பந்து விளையாடிவிட்டு காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, அவரது வாகனத்தை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மும்பை போலீசார், தாக்குதலுக்கான காரணம் மற்றும் நடிகருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணையை முன்னெடுத்தனர். தாக்குதலில் ஈடுபட்டவர்களைத் தேடும் பணியில் மும்பை மற்றும் ராஜஸ்தான் போலீசார் இணைந்து செயல்பட்டனர். இதன் ஒரு பகுதியாக, ராஜஸ்தானின் கோட்டா ரெயில் நிலையத்தில் புனே-ஜெய்ப்பூர் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நேபாளத்துக்குத் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. பிடிபட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பிற நபர்கள் குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட்டன. இந்நிலையில், ஹரியானாவின் சோனிபட்டைச் சேர்ந்த சமீர் என்பவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உள்ள தொடர்பு குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.இதற்கிடையே, துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றதாகக் கூறப்படும் சமூக வலைதளப் பதிவுகளும் ஒலிப்பதிவுகளும் வெளியாகியுள்ளன. சல்மான் கானுடன் பணியாற்றும் நடிகர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்கும் இந்தத் தாக்குதலுக்கும் தொடர்பு இருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.