டெல்லியில் இன்று நடைபெறுகிறது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
25 Aug 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 25 Aug 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

டெல்லியில் இன்று நடைபெறுகிறது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்

டெல்லியில் இன்று நடைபெறுகிறது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்

கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய 4 மாநிலங்களும் காவிரி நீரை சுமூகமாக பகிர்ந்து கொள்வதற்காக, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி 2018-ம் ஆண்டு காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டன. அதன்பிறகு, இரு அமைப்புகளும் அவ்வப்போது கூட்டங்களை நடத்தி நதிநீர் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.இதுவரை காவிரி மேலாண்மை ஆணையம் 52 முறை கூடியுள்ளது. இந்நிலையில், ஆணையத்தின் 54-வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க 4 மாநிலங்களின் அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் நேரடியாகவோ அல்லது காணொலி வாயிலாகவோ கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக, தமிழக அதிகாரிகள் காவிரி மேலாண்மை ஆணையத்திடம் வலியுறுத்த உள்ளனர்.