டெல்லியில் 22-ந்தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
18 Jul 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 18 Jul 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

டெல்லியில் 22-ந்தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்

டெல்லியில் 22-ந்தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்

காவிரி நதிநீரை கர்நாடகம், தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய 4 மாநிலங்களும் பிரச்சினை இன்றி பகிர்ந்து கொள்வதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு கடந்த 2018-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. அப்போதிலிருந்து தற்போது வரை இந்த இரு அமைப்புகளும் அவ்வப்போது கூடி நதிநீர் பிரச்சினைகளை தீர்த்து வருகின்றன. இந்த வகையில் மேலாண்மை ஆணையம் 52 முறை கூட்டப்பட்டுள்ளது.இதன் தொடர்ச்சியாக 53-வது கூட்டம் வருகிற 22-ந்தேதி நடைபெற உள்ளது. ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் டெல்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்க 4 மாநிலங்களின் அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுத்து உள்ளனர். 22-ந்தேதி பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் 4 மாநில அதிகாரிகளும் நேரிலோ அல்லது காணொலி வாயிலாகவோ கலந்து கொள்வார்கள்.