டெல்லியில் 17 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: வாலிபர் சுட்டுப்பிடிப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
22 Sep 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 22 Sep 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

டெல்லியில் 17 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: வாலிபர் சுட்டுப்பிடிப்பு

டெல்லியில் 17 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: வாலிபர் சுட்டுப்பிடிப்பு

டெல்லியில் காவலர்கள் எனக் கூறி 17 வயது சிறுமியை மிரட்டி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஆசிப்பை போலீசார் துப்பாக்கிச்சூட்டுக்குப் பிறகு கைது செய்துள்ளனர். போலீசாரை நோக்கி அவர் துப்பாக்கியால் சுட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பதில் தாக்குதலில் அவரது காலில் குண்டு பாய்ந்தது. டெல்லியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, திங்கட்கிழமை மாலை சுமார் 7 மணியளவில் தனது ஆண் நண்பருடன் கல்காஜி மந்திருக்கு சாமி தரிசனம் செய்யச் சென்றுள்ளார். தரிசனத்தை முடித்துவிட்டு இருவரும் அருகிலுள்ள ஆஸ்தா குஞ்ச் பூங்காவில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மூன்று பேர், தாங்கள் காவலர்கள் எனக் கூறி இருவரையும் மிரட்டியுள்ளனர். தொடர்ந்து சிறுமியின் ஆண் நண்பரைத் தாக்கிவிட்டு, சிறுமியை மூவரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து இரவு 8.45 மணியளவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த டெல்லி போலீசார், சம்பவத்தில் தொடர்புடையவர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில், முக்கிய குற்றவாளியான ஆசிப், அமர் காலனி பகுதியில் உள்ள டி.எம். அலுவலக சாலை அருகே பதுங்கியிருப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை அதிகாலை அங்கு சென்ற போலீசார், ஆசிப்பை சுற்றி வளைத்தனர். அப்போது அங்கிருந்து தப்பிக்க முயன்ற அவர், போலீசாரை நோக்கி மூன்று முறை துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து போலீசார் தற்காப்புக்காக நடத்திய பதில் துப்பாக்கிச்சூட்டில் ஆசிப்பின் காலில் குண்டு பாய்ந்தது. காயமடைந்த ஆசிப்பை மீட்ட போலீசார், அவரை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர காவலில் வைத்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற இருவரையும் கைது செய்வதற்காகத் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.