டெல்லியில் 16 மெட்ரோ ரெயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடல்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

22 Jul 2026 www.thinathulir.com

டெல்லியில் 16 மெட்ரோ ரெயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடல்

டெல்லியில் 16 மெட்ரோ ரெயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடல்

நீட் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளில் ஏற்பட்ட முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணியாகச் சென்றனர். பேரணியைக் கட்டுப்படுத்த டெல்லி போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர். இந்தச் சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்ந்துவரும் நிலையில், ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவர்கள் அதிக அளவில் திரண்டுள்ளனர். இதையடுத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, டெல்லியில் உள்ள 16 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.