டெல்லி: ரூ.12.6 லட்சம் ஆண்டு சம்பளம் பெறும் ஊழியருக்கு ரூ.9.2 கோடி வருமான வரி நோட்டீஸ்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
11 Nov 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 11 Nov 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

டெல்லி: ரூ.12.6 லட்சம் ஆண்டு சம்பளம் பெறும் ஊழியருக்கு ரூ.9.2 கோடி வருமான வரி நோட்டீஸ்

டெல்லி: ரூ.12.6 லட்சம் ஆண்டு சம்பளம் பெறும் ஊழியருக்கு ரூ.9.2 கோடி வருமான வரி நோட்டீஸ்

டெல்லியில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு, ஆண்டுக்கு ரூ.12.6 லட்சம் மட்டுமே சம்பளம் கிடைக்கும் நிலையில், ரூ.9.2 கோடி கணக்கில் காட்டப்படாத வருமானம் தொடர்பாக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது பான் கார்டு மற்றும் கேஒய்சி ஆவணங்களைத் திருடி, போலி நிறுவனங்களை உருவாக்கி கோடிக்கணக்கில் பணப் பரிவர்த்தனை செய்த மோசடி கும்பலின் செயல் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. புதுடெல்லியில் உள்ள தனியார் டெலிகாம் நிறுவனத்தில் பணிபுரியும் அந்த ஊழியருக்கு, கடந்த செப்டம்பர் 9-ம் தேதி வருமான வரித்துறையின் நோட்டீஸ் கிடைத்தது. ஆகஸ்ட் 20-ம் தேதி தயாரிக்கப்பட்ட அந்த நோட்டீஸில், 2019-ம் ஆண்டு ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும் ரூ.6.5 கோடி அளவுக்கு வர்த்தகப் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், மொத்தம் ரூ.9.2 கோடி கணக்கில் காட்டப்படாத வருமானம் குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நோட்டீஸ் உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஒரு முகவரிக்கு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், சம்பந்தப்பட்ட ஊழியர் அந்த வீட்டை 2013-ம் ஆண்டிலேயே காலி செய்துவிட்டார். இதனால் பழைய முகவரி தொடர்பான தகவல்கள் மூலம் அவருக்கு இந்த விவகாரம் தெரியவந்தது. இதையடுத்து விசாரணை நடத்தியபோது, அவரது பான் கார்டு மற்றும் கேஒய்சி ஆவணங்களைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் டெல்லியில் இரண்டு போலி ஜிஎஸ்டி பதிவுகளைப் பெற்றிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, அந்த போலி நிறுவனங்களின் பெயர்களில் வங்கிக் கணக்குகளையும் தொடங்கி, 2019-ம் ஆண்டின் இரண்டு மாதங்களில் மட்டும் ரூ.6.5 கோடி மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகளை மோசடி கும்பல் மேற்கொண்டுள்ளது. தனது அனுமதியின்றி அடையாள ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டு, தன் பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் வரி ஏய்ப்பு மோசடி நடைபெற்றிருப்பதை அறிந்த ஊழியர், டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், கடந்த நவம்பர் 3-ம் தேதி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலி நிறுவனங்களை உருவாக்கி, அவற்றின் வங்கிக் கணக்குகள் மூலம் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்ட மோசடி கும்பலைக் கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.