டெல்லி காலணி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 4 பேர் உயிரிழப்பு; 2 பேர் மருத்துவமனையில் அனுமதி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
31 Oct 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 31 Oct 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

டெல்லி காலணி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 4 பேர் உயிரிழப்பு; 2 பேர் மருத்துவமனையில் அனுமதி

டெல்லி காலணி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 4 பேர் உயிரிழப்பு; 2 பேர் மருத்துவமனையில் அனுமதி

டெல்லியின் மங்கோல்புரி தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் காலணி தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தொழிற்சாலையின் முதல் யூனிட்டில் இரவு 9.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அடித்தளத்தில் பற்றிய தீ, பல மணி நேரமாக கொழுந்துவிட்டு எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர், தீ மற்ற பகுதிகளுக்குப் பரவாமல் தடுக்க தீவிரமாகப் போராடி அணைத்தனர். மீட்புப் பணிக்கு உதவியாக போலீசாரும் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து நடைபெற்ற மீட்புப் பணியின்போது, தொழிற்சாலைக்குள் 6 பேர் சுயநினைவின்றி கிடந்தது கண்டறியப்பட்டது. அவர்களில் ஒருவர் மூன்றாவது தளத்தின் படிக்கட்டுப் பகுதியிலும், மற்ற 5 பேர் நான்காவது தளத்திலும் இருந்தனர். அனைவரையும் போலீசார் மீட்டு, மங்கோல்புரியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே 4 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. எஞ்சிய 2 பேருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.