டியூசன் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு: ஆசிரியர் கைது
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
25 Jul 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 25 Jul 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

டியூசன் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு: ஆசிரியர் கைது

டியூசன் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு: ஆசிரியர் கைது

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தின் சூண்டல் பகுதியைச் சேர்ந்த 42 வயதான நவுஷாத், தனது வீட்டில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு டியூசன் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், டியூசனுக்கு வந்த சில மாணவிகளிடம் அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 3 சிறுமிகள், நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்துத் துயரமடைந்துள்ளனர்.இதையடுத்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், திருச்சூர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு நவுஷாத்தை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.