டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

17 Sep 2026 www.thinathulir.com

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுதொடர்பான அறிவுறுத்தல்கள் மற்றும் முக்கிய தகவல்களை தேர்வாணையம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அறிவிப்பில், 23.06.2026 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கை எண் 05/2026-ன் அடிப்படையில், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1 (தொகுதி-பணிகள்) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு நடைபெற உள்ளது. கொள்குறி வகையில், ஒளிக்குறி உணரி முறையில் நடைபெறும் இந்தத் தேர்வு, வரும் 27.09.2026 அன்று முற்பகலில் நடைபெறுகிறது. தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு (Hall Ticket), டி.என்.பி.எஸ்.சி.யின் [www.tnpsc.gov.in](http://www.tnpsc.gov.in) மற்றும் [www.tnpscexams.in](http://www.tnpscexams.in) ஆகிய இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது ஒருமுறை பதிவு (OTR Dashboard) மூலமாக விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.