டாஸ்மாக் மதுபாட்டில்களின் விலை உயர்த்தப்படவில்லை - அமைச்சர் விக்னேஷ்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
30 Oct 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 30 Oct 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

டாஸ்மாக் மதுபாட்டில்களின் விலை உயர்த்தப்படவில்லை - அமைச்சர் விக்னேஷ்

டாஸ்மாக் மதுபாட்டில்களின் விலை உயர்த்தப்படவில்லை - அமைச்சர் விக்னேஷ்

தமிழகத்தில் மதுபாட்டில்களுக்கு சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலக் கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நவம்பர் 1-ம் தேதி முதல் மதுபாட்டில்களின் அதிகபட்ச சில்லறை விலையில் (எம்.ஆர்.பி.) ரூ.10 கூடுதலாக இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண நடைமுறை பீர், ஒயின், வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் மதுபானங்கள் உள்ளிட்ட அனைத்து வகைகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மதுபானங்களின் விலை உயர்த்தப்படவில்லை என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மதுபாட்டில்களின் விலையில் கூடுதலாக சேர்க்கப்படும் ரூ.10 தொகையானது, காலி பாட்டிலை மீண்டும் ஒப்படைக்கும் நுகர்வோருக்கு திருப்பி வழங்கப்படும். பாட்டில்களை திரும்ப ஒப்படைக்காதவர்களிடம் வசூலிக்கப்படும் தொகை அரசின் வருவாயில் சேர்க்கப்படும் என்றார். தற்போதைய நிலவரப்படி, விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களில் 60 சதவீதம் மட்டுமே மீண்டும் ஒப்படைக்கப்படுகின்றன. எஞ்சிய 40 சதவீத பாட்டில்கள் திரும்ப வழங்கப்படுவதில்லை. எனவே, மதுபானங்களின் விலையை அரசு உயர்த்தவில்லை என்றும், காலி பாட்டில்களை திரும்பப் பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் புதிய கட்டண நடைமுறை மட்டுமே அமல்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார்.