டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டை பெற்ற “டோரதி” திரைப்படம்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

12 Sep 2026 www.thinathulir.com

டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டை பெற்ற “டோரதி” திரைப்படம்

டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டை பெற்ற “டோரதி” திரைப்படம்

டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டை பெற்ற “டோரதி” திரைப்படம்# டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டை பெற்ற “டோரதி” திரைப்படம் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம், டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோது பார்வையாளர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’, ‘பேட்ட’, ‘மகான்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘ரெட்ரோ’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ், தனது 10-வது படமாக ‘டோரதி’யை இயக்கியுள்ளார். இதில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். அவரது திரையுலகப் பயணத்தில் இது 1540-வது திரைப்படமாகும். கார்த்திக் சுப்பராஜின் முந்தைய 9 படங்களில் ‘பேட்ட’ படத்திற்கு மட்டும் அனிருத் இசையமைத்திருந்தார். மற்ற படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். அதேவேளை, தனது படங்களின் முக்கிய காட்சிகளில் இளையராஜாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையைப் பயன்படுத்துவதை கார்த்திக் சுப்பராஜ் வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில், முதல்முறையாக முழு திரைப்படத்திற்கும் இளையராஜா இசையமைத்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. மதுரையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள ‘டோரதி’, 1980-களில் நடைபெறும் கதைக்களத்தைக் கொண்டுள்ளது. நட்பு மற்றும் காதலை மையமாகக் கொண்டு அழுத்தமான படைப்பாக இது உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் வரும்செப்டம்பர் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. கார்த்திக் சுப்பராஜ் - இளையராஜா கூட்டணியில் உருவாகியுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கிடையில், படத்தின் முதல் பாடலான ‘கல்யாண விருந்து’ சமீபத்தில் வெளியாகி வைரலானது. இளையராஜா இசையமைத்த இந்தப் பாடலை அந்தோணி தாசன், யுகேந்திரன், பிரியா ஜெர்சன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். தொடர்ந்து, இரண்டாவது பாடலான ‘முத்துமணி’ வெளியாகியுள்ளது. இப்பாடலை இளையராஜா மற்றும் ஸ்வேதா மோகன் இணைந்து பாடியுள்ளதுடன், பாடல் வரிகளையும் இளையராஜாவே எழுதியுள்ளார். ‘டோரதி’ படத்தின் பின்னணி இசை வெளியீடும் அண்மையில் நடைபெற்றது. இளையராஜா வெளியிட்ட இந்த பின்னணி இசைத் தொகுப்பில் 18 இசைத்துணுக்குகள் இடம்பெற்றுள்ளன. இவை ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்று வருகின்றன. இந்நிலையில், ‘டோரதி’ திரைப்படம் டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இதற்காக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் டொரண்டோ சென்றிருந்தனர். திரைப்படம் திரையிடப்பட்டதைத் தொடர்ந்து, அதனைப் பார்த்த பார்வையாளர்கள் எழுந்து நின்று கைதட்டி படக்குழுவினரை உற்சாகப்படுத்தினர். டொரண்டோவில் கிடைத்த இந்த Standing Ovation, படக்குழுவினருக்கு மகிழ்ச்சியையும் பெருமையையும் அளித்துள்ளது.