ஜெர்மனியில் ஹிட்லரின் மலைவாழ் இல்லத்தில் தீ விபத்து!
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
24 Oct 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 24 Oct 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஜெர்மனியில் ஹிட்லரின் மலைவாழ் இல்லத்தில் தீ விபத்து!

ஜெர்மனியில் ஹிட்லரின் மலைவாழ் இல்லத்தில் தீ விபத்து!

ஜெர்மனியின் தெற்குப் பகுதியில் உள்ள பவேரியா மாநிலத்தில், சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் பயன்படுத்திய மலைவாழ் இல்லமான ‘ஈகிள்ஸ் நெஸ்ட்’ கட்டிடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 33 வயதுடைய ஜெர்மானியர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். பவேரியாவின் ட்ரான்ஸ்டைன் பகுதியில் செயல்படும் அவசரக் கட்டுப்பாட்டு மையத்துக்கு நேற்று இரவு 9.15 மணியளவில், ஈகிள்ஸ் நெஸ்ட் கட்டிடத்தில் தீப்பற்றியுள்ளதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, தீயணைப்புப் படையினர் உடனடியாக அங்கு விரைந்தனர். அவர்கள் சென்றபோது கட்டிடம் முழுவதும் தீயில் சிக்கியிருந்தது. தீயைக் கட்டுப்படுத்தவும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் சுமார் 200 பணியாளர்கள் களமிறக்கப்பட்டனர். இருப்பினும், இன்று அதிகாலை வரையிலும் தீ தொடர்ந்து எரிந்துகொண்டிருந்தது. மலைப்பகுதியில் நிலவும் கடினமான நில அமைப்பு காரணமாக தீயை அணைப்பதில் சவால்கள் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே, தீ விபத்து நிகழ்ந்த இடத்தின் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த 33 வயது நபரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருப்பதற்கான அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை என்று போலீஸ் அதிகாரி கெர்ஹார்ட் ஹோல்சிங்கர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம், அதன் பின்னணியில் இருந்த நோக்கம் ஆகியவை குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், இந்தச் சம்பவத்துக்கு அரசியல் நோக்கம் ஏதேனும் காரணமாக உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.