ஜெருசலேம் புனிதப் பயணம் சென்ற கிறிஸ்தவர்கள் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
30 Oct 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 30 Oct 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஜெருசலேம் புனிதப் பயணம் சென்ற கிறிஸ்தவர்கள் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

ஜெருசலேம் புனிதப் பயணம் சென்ற கிறிஸ்தவர்கள் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

ஜெருசலேமுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டு தமிழகம் திரும்பிய கிறிஸ்தவர்கள், தமிழக அரசின் நிதியுதவியைப் பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு சார்பில் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பும் கிறிஸ்தவர்களுக்கு மானியம் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள 550 கிறிஸ்தவப் பயணிகளுக்கு தலா ரூ.37 ஆயிரமும், 50 கன்னியாஸ்திரிகளுக்கு தலா ரூ.60 ஆயிரமும் நிதியுதவியாக வழங்கப்படுகிறது. இந்தத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படும். அந்த வகையில், நடப்பு ஆண்டில் ஜெருசலேம் புனிதப் பயணத்தை முடித்துத் திரும்பிய கிறிஸ்தவர்களிடமிருந்து தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். மேலும், தமிழக அரசின் www.bcmbcmw.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து, 'ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமகால் பாரம்பரியக் கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை - 600003' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 2027 ஜனவரி 31 ஆகும். இவ்வாறு சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார்.