ஜெய் நடிக்கும் புதிய படம்... தென்காசியில் படப்பிடிப்பு தொடக்கம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
13 Oct 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 13 Oct 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஜெய் நடிக்கும் புதிய படம்... தென்காசியில் படப்பிடிப்பு தொடக்கம்

ஜெய் நடிக்கும் புதிய படம்... தென்காசியில் படப்பிடிப்பு தொடக்கம்

நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு, தென்காசியில் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. ஹாரர் காமெடி கதைக்களத்தில் தயாராகும் இப்படத்தில், ஜெய்க்கு ஜோடியாக டெல்னா டேவிஸ் நடிக்கிறார். நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ‘பகவதி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜெய். இதையடுத்து ‘சென்னை 28’, ‘சுப்ரமணியபுரம்’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘கலகலப்பு 2’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதுவரை 25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ஜெய், தற்போது தனது அடுத்த படத்தில் நடிக்கத் தொடங்கியுள்ளார். திகிலும் நகைச்சுவையும் கலந்த கதையம்சத்துடன் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் இன்று பூஜையுடன் ஆரம்பமானது. அறிமுக இயக்குநர் சிவ பிரசன்னா இப்படத்தை இயக்குகிறார். தியாகராஜா டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஏ.எம். பிரபாகரன் படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.