"ஜெயிலர் 2" இன்று மாலை வெளியாகும் முக்கிய அறிவிப்பு
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

18 Sep 2026 www.thinathulir.com

"ஜெயிலர் 2" இன்று மாலை வெளியாகும் முக்கிய அறிவிப்பு

"ஜெயிலர் 2" இன்று மாலை வெளியாகும் முக்கிய அறிவிப்பு

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் தொடர்பான முக்கிய அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து 2023-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. இதில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஜெயிலர்’, உலக அளவில் ரூ.600 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக கூறப்பட்டது. இந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. மீண்டும் ரஜினிகாந்த் - நெல்சன் திலீப்குமார் கூட்டணி இணைந்திருப்பதால், ‘ஜெயிலர் 2’ மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் முக்கிய கேமியோ கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுடன் ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. வரும் அக்டோபர் 15-ம் தேதி உலகம் முழுவதும் திரைப்படம் வெளியாக உள்ளது. இதற்கிடையே ‘ஜெயிலர் 2’ படத்தின் முதல் பாடலாக ‘அல்ல போலேலோ’ சமீபத்தில் வெளியானது. இதில் நடிகை பூர்ணா சிறப்பு நடனம் ஆடியிருந்தார். முதல் பாகத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ பாடலைப் போலவே, ‘அல்ல போலேலோ’ பாடலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வைரலானது. இந்நிலையில், ‘ஜெயிலர் 2’ படத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய கதாபாத்திரங்களின் அறிமுகம் தொடர்பான அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. இதனால் படத்தின் கதாபாத்திரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.