ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் பல நூறு கோடி ரூபாய் பேரம் நடந்ததாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
27 Sep 2026, ஞாயிறு | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 27 Sep 2026, Sunday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் பல நூறு கோடி ரூபாய் பேரம் நடந்ததாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு

ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் பல நூறு கோடி ரூபாய் பேரம் நடந்ததாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு

மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், ஜெம் வீரமணி தொடர்பான வழக்கை திமுக அரசு கையாண்ட விதத்தில் தவறு இருப்பதாக குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தில் திமுக தரப்பில் இருந்து அதிகமான எதிர்வினைகள் வருவது, வழக்கில் ஏதேனும் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்தார். மேலும், ஜெம் வீரமணியை காப்பாற்ற திமுகவினர் முயற்சிப்பதாகவும் அவர் கூறினார். வீரமணி தொடர்பான வீடியோவில் போதுமான ஆதாரங்கள் இல்லை என முன்னாள் அமைச்சர் ரகுபதி கூறியிருப்பதையும் அமைச்சர் நிர்மல்குமார் விமர்சித்தார். 2024-ம் ஆண்டு வீரமணிக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் அப்போதைய போலீஸ் கமிஷனரிடம் சென்றதாகவும், அது குறித்து முதல்-அமைச்சருக்கும் தகவல் சென்றிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். வீரமணியிடம் பலர் பேரம் பேசி பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்திருந்த நிலையில், அப்போது ஆட்சியில் இருந்த முதல்-அமைச்சர் என்ன நடவடிக்கை எடுத்தார், என்ன உத்தரவு பிறப்பித்தார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி வழக்கு முடிக்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர், ஒன்றரை ஆண்டுகளாக இந்த விவகாரம் திரைமறைவில் நடைபெற்றதாக குற்றம்சாட்டினார். மேலும், கடந்த ஆட்சிக் காலத்தில் ஜெம் வீரமணி மீதான வழக்கு சாதாரணமாக முடித்து வைக்கப்பட்டதாகவும், இதற்காக பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு பேரம் நடைபெற்றதாகவும் அவர் கூறினார். இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மற்றும் அவர்களுக்கு துணைநின்றவர்கள் மீதுகடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார். தொடர்ந்து அரசியல் நிலவரம் குறித்து பேசிய அவர், இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஏன் அதிமுகவில் இருந்து வெளியேறினர் என்பதற்கும் காரணம் இருப்பதாகக் கூறினார். திமுகவும், அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதே அதற்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்தார். தற்போதைய அதிமுக, எடப்பாடி பழனிசாமியின் அதிமுகவாக இருப்பதாகவும், அதில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் விசுவாசிகள் யாரும் இல்லை என்றும் அவர் விமர்சித்தார். இதேபோன்று திமுகவும் மாற்றம் அடையும் எனக் கூறிய அவர், அண்ணா மற்றும் கருணாநிதி காலத்தில் இருந்த திமுக தற்போது இல்லை என்றும் தெரிவித்தார். மு.க.ஸ்டாலினை நம்ப முடியாத நிலையில் திமுகவினர் இருப்பதாகவும், அடுத்த தேர்தலில் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதியை முன்னிறுத்தி அக்கட்சி வாக்கு கேட்க முடியுமா என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார். திமுகவின் நன்மதிப்பு அவர்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் இரண்டு ஆண்டுகளில் திமுகவும் அதிமுகவைப் போன்ற நிலைக்கு வரும் என்றும் அவர் கூறினார். வக்பு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடியது தமிழக வெற்றிக் கழகம்தான் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதாகவும், பாஜகவை கொள்கை எதிரியாக அறிவித்த ஒரே தலைவர் விஜய் என்றும் அவர் தெரிவித்தார்.