ஜூனியர் ஆசிய கோப்பை: இந்தியாவுக்கு எதிராக ஐக்கிய அரபு அமீரகம் பந்துவீச்சு தேர்வு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
10 Nov 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 10 Nov 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஜூனியர் ஆசிய கோப்பை: இந்தியாவுக்கு எதிராக ஐக்கிய அரபு அமீரகம் பந்துவீச்சு தேர்வு

ஜூனியர் ஆசிய கோப்பை: இந்தியாவுக்கு எதிராக ஐக்கிய அரபு அமீரகம் பந்துவீச்சு தேர்வு

19 வயதுக்கு உட்பட்டோருக்கான 13-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரில், இன்று 'ஏ' பிரிவுக்கான கடைசி லீக் ஆட்டம் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொள்கிறது. காலை 10.30 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகளைப் பெற்றுள்ளன. எனவே, இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, 'ஏ' பிரிவில் இருந்து அரையிறுதிக்கு முன்னேறும் இரண்டாவது அணியாகத் தகுதி பெறும். இந்நிலையில், போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணியின் கேப்டன் அயான் மிஷாப் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.