'ஜுமாஞ்சி: ஓபன் வேர்ல்டு' படத்தின் டிரெய்லர் வெளியீடு
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

29 Jul 2026 www.thinathulir.com

'ஜுமாஞ்சி: ஓபன் வேர்ல்டு' படத்தின் டிரெய்லர் வெளியீடு

'ஜுமாஞ்சி: ஓபன் வேர்ல்டு' படத்தின் டிரெய்லர் வெளியீடு

ஹாலிவுட்டின் பிரபலமான சாகச திரைப்படத் தொடரான ‘ஜுமாஞ்சி’யின் புதிய பாகமான ‘ஜுமாஞ்சி: ஓபன் வேர்ல்டு’ படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதில் டுவெய்ன் ஜான்சன், கெவின் ஹார்ட், ஜாக் பிளாக், கரேன் கில்லன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் மீண்டும் நடித்துள்ளனர்.முந்தைய ‘ஜுமாஞ்சி’ படங்களை இயக்கிய ஜேக் காஸ்டன், இந்த புதிய படத்தையும் இயக்கியுள்ளார். நவீன ‘ஜுமாஞ்சி’ திரைப்பட வரிசையின் நிறைவுப் பகுதியாக இந்தப் படம் உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.“ஒன் லாஸ்ட் கேம்” என்ற வாசகத்துடன் வெளியான டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இதுவரை வெளியான படங்களில் கதாபாத்திரங்கள் ஜுமாஞ்சி விளையாட்டுக்குள் சிக்குவது போல கதை அமைந்திருந்த நிலையில், இந்த முறை ஜுமாஞ்சி உலகமே நிஜ உலகிற்குள் வந்து புதிய சிக்கல்களை உருவாக்குவது போல் கதை நகர்கிறது.‘ஜுமாஞ்சி: ஓபன் வேர்ல்டு’ திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிசம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதே காலகட்டத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்’ திரைப்படமும் வெளியாக இருப்பதால், சர்வதேச வசூலில் இரு படங்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.