‘ஜாலியா பேசலாம்னு வந்தேன், ஆனால்...’ - திரையரங்கில் ரசிகர்களை சந்தித்து நயன்தாரா நெகிழ்ச்சி
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

04 Sep 2026 www.thinathulir.com

‘ஜாலியா பேசலாம்னு வந்தேன், ஆனால்...’ - திரையரங்கில் ரசிகர்களை சந்தித்து நயன்தாரா நெகிழ்ச்சி

‘ஜாலியா பேசலாம்னு வந்தேன், ஆனால்...’ - திரையரங்கில் ரசிகர்களை சந்தித்து நயன்தாரா நெகிழ்ச்சி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா, நடிகர் கவினுடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஹாய்’. லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய விஷ்ணு எடவன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.படத்தில் ராதிகா சரத்குமார், பாக்யராஜ், பிரபு, பூர்ணிமா, காவ்யா அறிவுமணி, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.‘ஹாய்’ படத்தின் ‘கண்ணக்குழியா’, ‘ரசகுல்லா’, ‘பச்ச புள்ள’, ‘குடிகார நெஞ்சு’ உள்ளிட்ட பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக, விஷ்ணு எடவன் எழுதிய வரிகளில் ஜி.வி. பிரகாஷ் குமார் பாடிய ‘கண்ணக்குழியா’ பாடல் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.கடந்த 28-ந்தேதி திரையரங்குகளில் வெளியான ‘ஹாய்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் ஓடி வருகிறது.இந்த நிலையில், சென்னை வடபழனியில் உள்ள திரையரங்கிற்கு நயன்தாரா நேரில் சென்றார். அங்கு ‘ஹாய்’ படத்தை காண வந்த ரசிகர்களை சந்தித்து கலந்துரையாடிய அவர், படத்திற்கு ஆதரவு அளித்து வெற்றிபெறச் செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது பேசிய நயன்தாரா, “இங்கு வரும்போது ஜாலியாக பேசலாம் என்று நினைத்துதான் வந்தேன். ஆனால் உங்களை எல்லாம் பார்த்ததும் ஒருமாதிரியாக எமோஷனலாக இருக்கிறது”** என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.