‘ஜவான்’ சாதனையை காலி செய்த ‘டாக்சிக்’.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
27 Aug 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 27 Aug 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

‘ஜவான்’ சாதனையை காலி செய்த ‘டாக்சிக்’.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

‘ஜவான்’ சாதனையை காலி செய்த ‘டாக்சிக்’.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், வசூல் ரீதியாக ‘டாக்சிக்’ திரைப்படம் தொடக்கத்திலேயே கவனம் ஈர்த்துள்ளது. உலக அளவில் முதல் நாளில் இப்படம் ரூ.140.75 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்சிக்’ திரைப்படத்தை கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த கேங்ஸ்டர் டிராமா திரைப்படம் ஆகஸ்ட் 26-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் கலவையான வரவேற்பே கிடைத்து வருகிறது. அதேவேளையில், படத்தின்ஆக்‌ஷன்காட்சிகளும்யாஷின்நடிப்பும்ரசிகர்களின்கவனத்தைபெற்றுள்ளன.இந்நிலையில், ‘டாக்சிக்’ திரைப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.140.75 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் இந்தியாவில் ரூ.120.75 கோடியும், வெளிநாடுகளில் ரூ.20 கோடியும் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.முதல் நாள் வசூல் அடிப்படையில் ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படத்தின் சாதனையையும் ‘டாக்சிக்’ முறியடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம்யாஷ்நடிப்பில்வெளியானஇப்படம்புதியவசூல்சாதனையைபதிவுசெய்துள்ளது.எனினும்,யாஷின்நடிப்பில்வெளியாகிமிகப்பெரியவெற்றியைபெற்ற‘கே.ஜி.எப்:2’திரைப்படத்தின்முதல்நாள்வசூல்சாதனையை‘டாக்சிக்’இன்னும்முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.முதல் நாளிலேயே ரூ.140 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதால், அடுத்தடுத்த நாட்களில் ‘டாக்சிக்’ படத்தின் வசூல் மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.