ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

17 Sep 2026 www.thinathulir.com

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்ட வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ‘ஒயிட் நைட் கார்ப்ஸ்’ படைப்பிரிவினர், காவல்துறை மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் இணைந்து நேற்று இரவு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். மோசமான வானிலை மற்றும் சவாலான நிலப்பரப்புக்கு மத்தியில் இந்த நடவடிக்கை நடைபெற்றது. இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்த நிலையில், பாதுகாப்புப் படையினர் நடத்திய நடவடிக்கையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். விசாரணையில், கொல்லப்பட்ட இருவரும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.