ஜப்பான்: அந்தரத்தில் தொங்கும் வளையத்தில் ஒரு நிமிடத்தில் 67 குட்டிக்கரணங்கள் – 9 வயது சிறுமி கின்னஸ் சாதனை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
14 Nov 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 14 Nov 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஜப்பான்: அந்தரத்தில் தொங்கும் வளையத்தில் ஒரு நிமிடத்தில் 67 குட்டிக்கரணங்கள் – 9 வயது சிறுமி கின்னஸ் சாதனை

ஜப்பான்: அந்தரத்தில் தொங்கும் வளையத்தில் ஒரு நிமிடத்தில் 67 குட்டிக்கரணங்கள் – 9 வயது சிறுமி கின்னஸ் சாதனை

ஜப்பானைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர், அந்தரத்தில் தொங்கும் வளையத்தில் (ஏரியல் ஹூப்) ஒரு நிமிடத்தில் 67 குட்டிக்கரணங்கள் அடித்து புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார். ஜப்பானின் ஒகினாவா மாகாணத்தில் உள்ள நாககாமி பகுதியைச் சேர்ந்தவர் சுசு ஹேபாரு (9). அந்தரத்தில் தொங்கும் ஏரியல் ஹூப்பில் பல்வேறு சாகசங்களை நிகழ்த்துவதில் சிறந்து விளங்கும் இவர், தனது பகுதியில் நடைபெற்ற பெண்களுக்கான சாதனைப் போட்டியில் பங்கேற்றார். இதில், ஒரு நிமிடத்திற்குள் அதிக எண்ணிக்கையில் குட்டிக்கரணங்கள் அடிக்கும் போட்டியில் பங்கேற்ற சுசு, அசுர வேகத்தில் சுழன்று 60 விநாடிகளில் 67 குட்டிக்கரணங்களை நிறைவு செய்தார். இதன்மூலம் முந்தைய சாதனையை முறியடித்து புதிய கின்னஸ் உலக சாதனையைத் தன்வசப்படுத்தினார். இந்த சாதனைக்குப் பின்னால் தனது மூத்த சகோதரியின் ஊக்கமும் இருப்பதாக கின்னஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அவரது சகோதரி ஏரியல் ஹூப் பயிற்சியில் ஈடுபடுவதைப் பார்த்து சுசுவுக்கும் இந்தக் கலையின் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கடினமான பயிற்சிகளை மேற்கொண்டதன் மூலம் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி நடைபெற்ற இந்தச் சாதனை முயற்சியை ஆய்வு செய்த கின்னஸ் உலக சாதனை நிறுவனம், சுசு ஹேபாருவின் சாதனையை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை தனது சாதனைப் புத்தகத்திலும் அவரது பெயரைச் சேர்த்துள்ளது. ஒன்பது வயதிலேயே வியக்க வைக்கும் வகையில் சாகசம் செய்து உலக சாதனை படைத்துள்ள சுசு ஹேபாருவுக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.