ஜப்பானை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
22 Sep 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 22 Sep 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஜப்பானை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா

ஜப்பானை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா

ஜப்பானுக்கு எதிரான ஒரே சர்வதேச டி20 போட்டியில் இந்திய அணி பரபரப்பான வெற்றியைப் பதிவு செய்தது. ஜப்பான் சென்றுள்ள இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணிக்கு எதிராக இன்று டி20 போட்டியில் களமிறங்கியது. டொஷிகி மாகாணத்தில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 5 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 32 ரன்கள் எடுத்தது. சஞ்சு சாம்சன் 9 ரன்களிலும், அபிஷேக் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இஷான் கிஷன் 3 ரன்களிலும், கேப்டன் ஷ்ரேயாஸ் 16 ரன்களிலும் வெளியேறினர். திலக் வர்மா 1 ரன்னுடனும், ஷிவம் துபே ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். ஜப்பான் அணியில் சார்லி 2 விக்கெட்டுகளையும், இப்ராகிம் மற்றும் பெஞ்சமின் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து 5 ஓவர்களில் 33 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜப்பான் அணி களமிறங்கியது. ஆனால் 5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 30 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை வசப்படுத்தியது. இந்திய பந்துவீச்சில் யஷ் தாக்கூர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.