ஜப்பானில் உலகை நெகிழ வைத்த ‘பஞ்ச் குன்’ மக்காக் குரங்கின் முதல் பிறந்தநாள் கோலாகலம்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

27 Jul 2026 www.thinathulir.com

ஜப்பானில் உலகை நெகிழ வைத்த ‘பஞ்ச் குன்’ மக்காக் குரங்கின் முதல் பிறந்தநாள் கோலாகலம்

ஜப்பானில் உலகை நெகிழ வைத்த ‘பஞ்ச் குன்’ மக்காக் குரங்கின் முதல் பிறந்தநாள் கோலாகலம்

ஜப்பானில் தாயால் கைவிடப்பட்ட பிறகு ஒரு பொம்மையைத் தாயாகக் கருதி வளர்ந்த ‘பஞ்ச் குன்’ என்ற மக்காக் குட்டி குரங்கின் முதல் பிறந்தநாள், ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் உணர்வுபூர்வமாகக் கொண்டாடப்பட்டது.ஜப்பானின் இச்சிகாவா சிட்டி உயிரியல் பூங்காவில் 2025-ஆம் ஆண்டு கோடை காலத்தில் பிறந்த பஞ்ச் குனை, பிறந்த சில நாட்களிலேயே அதன் தாய் வளர்க்க மறுத்து விட்டுச் சென்றது. இதனால் தனிமையில் தவித்த அந்தக் குட்டிக்காக, உயிரியல் பூங்கா ஊழியர்கள் ஆரஞ்சு நிற உராங்குட்டான் பொம்மை ஒன்றை வழங்கினர்.அந்தப் பொம்மையையே தனது தாயாக எண்ணிய பஞ்ச் குன், அதை எப்போதும் அணைத்தபடி இருந்தது. இந்த நெகிழ்ச்சியான காட்சிகள் இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் உள்ள ஏராளமான மக்களின் கவனத்தையும் அன்பையும் பெற்றது.தற்போது ஒரு வயதை எட்டியுள்ள பஞ்ச் குனின் பிறந்தநாளை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் உயிரியல் பூங்காவிற்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர். வெளிநாடுகளில் இருந்து வர முடியாத ரசிகர்கள் வாழ்த்து அட்டைகள் மற்றும் பல்வேறு பரிசுப் பொருட்களை அனுப்பி தங்களின் அன்பை வெளிப்படுத்தினர். மேலும், பூங்கா நிர்வாகம் சார்பில் அதற்கு மிகவும் பிடித்த சிறப்பு உணவுகளும், பழங்களால் தயாரிக்கப்பட்ட கேக்கும் வழங்கப்பட்டன.ஆரம்பத்தில் மற்ற குரங்குகளால் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருந்த பஞ்ச் குன், தற்போது அவற்றின் கூட்டத்தில் மெல்ல மெல்ல இணைந்து வாழக் கற்றுக்கொண்டு வருகிறது. பொம்மையின் துணையுடன் வளர்ந்த இந்தக் குட்டி குரங்குக்கு உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் வெளிப்படுத்திய அன்பும் ஆதரவும், சமூக வலைதளங்களில் மீண்டும் பலரையும் நெகிழச் செய்துள்ளது.