ஜனநாயகன் வெளியீடு: திரையரங்குகளில் திரண்ட ரசிகர்கள்... உற்சாக கொண்டாட்டம்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

23 Jul 2026 www.thinathulir.com

ஜனநாயகன் வெளியீடு: திரையரங்குகளில் திரண்ட ரசிகர்கள்... உற்சாக கொண்டாட்டம்

ஜனநாயகன் வெளியீடு: திரையரங்குகளில் திரண்ட ரசிகர்கள்... உற்சாக கொண்டாட்டம்

தமிழக முதல்-அமைச்சர் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இயக்குநர் எச். வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.தணிக்கை தொடர்பான சிக்கல்கள் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து படம் திட்டமிட்டபடி இன்று வெளியிடப்பட்டது. விஜய்யின் இறுதித் திரைப்படம் எனக் கூறப்படுவதால், உலகம் முழுவதும் 3,500-க்கும் அதிகமான திரைகளில் படம் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.தமிழ்நாட்டில் 1,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் காலை 9 மணிக்கு திரையிடப்பட்ட இந்தப் படம், கேரளா மற்றும் கர்நாடகாவில் காலை 6 மணிக்கும், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் காலை 8 மணிக்கும் வெளியானது.சென்னையில் கேசினோ, தேவி, ரோகிணி, சத்யம், காசி, கிருஷ்ணவேணி உள்ளிட்ட முக்கிய திரையரங்குகள் முன்பு அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். விஜய்யின் பாடல்களுக்கு நடனமாடி உற்சாகத்தை வெளிப்படுத்திய அவர்கள், கட் அவுட்களுக்கு பாலாபிஷேகமும் செய்து கொண்டாடினர்.விஜய்யின் இறுதித் திரைப்படம் என்ற எதிர்பார்ப்பு காரணமாக, 'ஜனநாயகன்' திரையரங்குகளில் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.