சொத்துவரி பெயர் மாற்றத்திற்கு ரூ.3,000 லஞ்சம்: நகராட்சி வருவாய் ஆய்வாளர் கைது
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
13 Nov 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 13 Nov 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

சொத்துவரி பெயர் மாற்றத்திற்கு ரூ.3,000 லஞ்சம்: நகராட்சி வருவாய் ஆய்வாளர் கைது

சொத்துவரி பெயர் மாற்றத்திற்கு ரூ.3,000 லஞ்சம்: நகராட்சி வருவாய் ஆய்வாளர் கைது

விருதுநகரில் சொத்து வரி ரசீதில் பெயர் மாற்றம் செய்வதற்காக ரூ.3,000 லஞ்சம் பெற்ற நகராட்சி வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் ஆவலப்பசாமி கோவில் தெருவைச் சேர்ந்த மைக்கேல்ராஜ், அதே பகுதியில் வீடு மற்றும் நிலம் ஒன்றை வாங்கியுள்ளார். இதற்கான சொத்து வரி ரசீதில் தனது பெயரை மாற்றுவதற்காக நகராட்சி வருவாய் ஆய்வாளர் ஹென்றி டேவிட்டை அணுகியுள்ளார். அப்போது பெயர் மாற்றம் செய்ய ரூ.4,000 லஞ்சம் தர வேண்டும் என அவர் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ரூ.3,000 வழங்க மைக்கேல்ராஜ் சம்மதித்ததுடன், இதுகுறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், டி.எஸ்.பி. ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் ரசாயனப் பொடி தடவிய ரூ.3,000 பணத்தை மைக்கேல்ராஜிடம் கொடுத்து அனுப்பினர். நகராட்சி அலுவலகம் அருகே உள்ள மைக்கேல்ராஜின் ஓட்டலுக்கு வந்த ஹென்றி டேவிட்டிடம் அந்தப் பணம் வழங்கப்பட்டது. அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரைக் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து, ஹென்றி டேவிட்டை நகராட்சி வருவாய்ப் பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், இன்ஸ்பெக்டர் பூமிநாதன் உள்ளிட்டோர் முன்னிலையில் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.