ஈரோடு–திருப்பூர் ரெயில் பாதையில் அமைந்துள்ள ஊத்துக்குளி ரெயில் நிலைய யார்டு பகுதியில் ரெயில்வே பாலம் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளுக்காக நாளை (புதன்கிழமை) சேலம் வழியாக இயக்கப்படும் 3 ரெயில்கள், வழித்தடத்தில் குறிப்பிட்ட இடங்களில் தாமதமாக இயக்கப்பட உள்ளன.அதன்படி, எர்ணாகுளம்–டாடாநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் (18190) 1 மணி 10 நிமிடங்கள் தாமதமாகவும், ஆலப்புழா–தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் (13352) 50 நிமிடங்கள் தாமதமாகவும் இயக்கப்படும்.இதேபோல், எர்ணாகுளம்–பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (16378) 15 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் என சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.