சேலம் வழியாக செல்லும் ரெயில் சேவையில் மாற்றம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
08 Sep 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 08 Sep 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

சேலம் வழியாக செல்லும் ரெயில் சேவையில் மாற்றம்

சேலம் வழியாக செல்லும் ரெயில் சேவையில் மாற்றம்

ஈரோடு–திருப்பூர் ரெயில் பாதையில் அமைந்துள்ள ஊத்துக்குளி ரெயில் நிலைய யார்டு பகுதியில் ரெயில்வே பாலம் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளுக்காக நாளை (புதன்கிழமை) சேலம் வழியாக இயக்கப்படும் 3 ரெயில்கள், வழித்தடத்தில் குறிப்பிட்ட இடங்களில் தாமதமாக இயக்கப்பட உள்ளன.அதன்படி, எர்ணாகுளம்–டாடாநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் (18190) 1 மணி 10 நிமிடங்கள் தாமதமாகவும், ஆலப்புழா–தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் (13352) 50 நிமிடங்கள் தாமதமாகவும் இயக்கப்படும்.இதேபோல், எர்ணாகுளம்–பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (16378) 15 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் என சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.