சேயோன் படப்பிடிப்பு: மதுரை புறப்பட்டார் சிவகார்த்திகேயன்!
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
10 Aug 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 10 Aug 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

சேயோன் படப்பிடிப்பு: மதுரை புறப்பட்டார் சிவகார்த்திகேயன்!

சேயோன் படப்பிடிப்பு: மதுரை புறப்பட்டார் சிவகார்த்திகேயன்!

‘அமரன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘சேயோன்’. ‘தாய் கிழவி’ படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இப்படத்தை இயக்கி வருகிறார்.மதுரையின் பாரம்பரியத்தை மையமாகக் கொண்டு, கிராமத்து பின்னணியில் உருவாகும் கமர்சியல் எண்டர்டெய்னராக இப்படம் உருவாகி வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் தெலுங்கு நடிகை பாக்யஸ்ரீ போர்ஸே, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.‘சேயோன்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஊட்டியில் சிறிது காலம் ஓய்வெடுத்து வந்தார்.இந்நிலையில், படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. இதற்காக மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிரமாண்டமான படப்பிடிப்பு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கியமான ஆக்சன் காட்சிகள் மற்றும் குடும்பப் பின்னணியிலான காட்சிகள் இங்கு படமாக்கப்பட உள்ளதாக தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, ‘சேயோன்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்று (திங்கட்கிழமை) மதுரையில் மீண்டும் தொடங்கியது. இதற்காக ஊட்டியில் ஓய்வில் இருந்த சிவகார்த்திகேயன், சென்னை விமான நிலையம் வழியாக மதுரைக்கு புறப்பட்டுச் சென்று படக்குழுவுடன் இணைந்தார்.படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ‘சேயோன்’ திரைப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.