செஸ் ஒலிம்பியாட்: வெள்ளி, வெண்கலம் வென்று இந்தியா அசத்தல்!
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
28 Sep 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 28 Sep 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

செஸ் ஒலிம்பியாட்: வெள்ளி, வெண்கலம் வென்று இந்தியா அசத்தல்!

செஸ் ஒலிம்பியாட்: வெள்ளி, வெண்கலம் வென்று இந்தியா அசத்தல்!

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா இரண்டு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. ஓபன் பிரிவில் இந்திய அணி வெள்ளிப் பதக்கமும், மகளிர் பிரிவில் இந்திய அணி வெண்கலப் பதக்கமும் கைப்பற்றியுள்ளது. ஓபன் பிரிவின் 11-வது சுற்றில் இந்தியா, ஹங்கேரி அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 2-2 என்ற புள்ளிக்கணக்கில் டிராவில் முடிந்தது. இதன் மூலம் இந்திய அணி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தைத் தட்டிச் சென்றது. ஜெர்மனி 3-வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றது. உஸ்பெகிஸ்தான் முதலிடத்தை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தைப் பெற்றது. மகளிர் பிரிவின் 11-வது மற்றும் கடைசி சுற்றில் இந்திய அணி, ஜார்ஜியாவை எதிர்கொண்டது. இந்தப் போட்டியும் 2-2 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. இந்திய வீராங்கனை ஹம்பி தனது ஆட்டத்தில் வெற்றி பெற்றார். வந்திகா அகர்வால் மற்றும் சவிதா ஸ்ரீ ஆகியோர் தங்களது ஆட்டங்களை டிரா செய்தனர். திவ்யா தனது ஆட்டத்தில் தோல்வியடைந்தார். 11 சுற்றுகளின் முடிவில் இந்திய மகளிர் அணி 3-வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வசப்படுத்தியது. இதன்மூலம் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா ஓபன் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலும் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.