செவிலியர்களின் முதுகில் குத்தும் தவெக அரசு: மு.க.ஸ்டாலின் சாடல்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
06 Oct 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 06 Oct 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

செவிலியர்களின் முதுகில் குத்தும் தவெக அரசு: மு.க.ஸ்டாலின் சாடல்

செவிலியர்களின் முதுகில் குத்தும் தவெக அரசு: மு.க.ஸ்டாலின் சாடல்

செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்களை காவல்துறையினர் கைது செய்த சம்பவத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், செவிலியர்களின் பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட வாழ்வாதார உரிமைகளுக்காக அவர்கள் அமைதியான முறையில் போராடியதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பதிலாக காவல்துறையை பயன்படுத்தி கைது செய்திருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களின் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி கைது செய்ததாக அவர்களது சட்ட ஆலோசகர் குற்றம்சாட்டியிருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதையடுத்து போராட்டக் களத்தில் இருந்த மற்ற செவிலியர்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார். எதிர்க்கட்சியாக இருந்தபோது செவிலியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, தேர்தல் நேரத்தில் பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்ததாகவும், தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு அதே கோரிக்கையை முன்வைக்கும் செவிலியர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், போராட்டக் களத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட போதிலும் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் செவிலியர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தியதாகவும், இரவு நேரத்தில் அவர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டதாகவும் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். செவிலியர்களை நோக்கி பெண் காவல் அதிகாரி ஒருவர் எச்சரிக்கும் வகையில் பேசியதாகக் கூறப்படும் சம்பவத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். போராடுபவர்களை அச்சுறுத்தி கைது செய்வது ஜனநாயக நடைமுறையா என கேள்வி எழுப்பியுள்ள மு.க.ஸ்டாலின், இதுகுறித்து காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். செவிலியர்களின் போராட்டத்தை கையாளும் விதம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள அவர், தவெக அரசு கூறும் மாற்றமும் ஜனநாயகமும் இதுதானா என்றும் தனது அறிக்கையில் விமர்சித்துள்ளார்.