செல்லப்பிராணிகளை கைவிட்டால் ரூ.10,000 அபராதம்: சென்னை மாநகராட்சி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
25 Sep 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 25 Sep 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

செல்லப்பிராணிகளை கைவிட்டால் ரூ.10,000 அபராதம்: சென்னை மாநகராட்சி

செல்லப்பிராணிகளை கைவிட்டால் ரூ.10,000 அபராதம்: சென்னை மாநகராட்சி

சென்னையில் நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளை பொது இடங்களில் கைவிடும் உரிமையாளர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று (செப். 25, 2026) ரிப்பன் கட்டிடத்தில் உள்ள மாமன்ற கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் சமீரன், இ.ஆ.ப., நிலைக்குழு மற்றும் மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சென்னையில் பொது இடங்களில் கைவிடப்படும் செல்லப்பிராணிகளை மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உள்ளனர். ஏற்கெனவே நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு பொருத்தப்பட்டுள்ள மைக்ரோ சிப்புகளை ஸ்கேனர் மூலம் பரிசோதித்து, அவற்றின் உரிமையாளர்களை கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு உரிமையாளர்கள் கண்டறியப்பட்டால், அவர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். ஆரம்பத்தில் இந்த குற்றத்துக்கு ரூ.25,000 அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அபராதத் தொகையை குறைக்க நிலைக்குழு பரிந்துரைத்ததைத் தொடர்ந்து, ரூ.10,000 என நிர்ணயிக்கப்பட்டு மாமன்றத்தின் ஒப்புதலுக்கு கொண்டு வரப்பட்டது. மேலும், மாநகராட்சியின் POS இயந்திரங்கள் மூலமாகவே இந்த அபராதத் தொகையை நேரடியாக வசூலிக்கும் வகையிலும் தீர்மானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.