செப் தாமு மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது! – முதல்-அமைச்சர் விஜய் இரங்கல்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
25 Oct 2026, ஞாயிறு | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 25 Oct 2026, Sunday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

செப் தாமு மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது! – முதல்-அமைச்சர் விஜய் இரங்கல்

செப் தாமு மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது! – முதல்-அமைச்சர் விஜய் இரங்கல்

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு மறைவுக்கு முதல்-அமைச்சர் விஜய் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். சமையல் கலை நிபுணரான செப் தாமு (72), உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்-அமைச்சர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், செப் தாமு என்று அறியப்பட்ட தாமோதரனின் மறைவு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தனது சமையல் திறமை மற்றும் வித்தியாசமான அணுகுமுறையால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் சமையல் கலையை மக்களிடையே பிரபலப்படுத்தியவர் செப் தாமு என விஜய் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், 2010-ம் ஆண்டு தனிநபராக மிக நீண்ட நேரம் சமையல் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்ததுடன், பத்மஸ்ரீ விருதையும் பெற்றவர் என்று தெரிவித்துள்ளார். செப் தாமுவின் மறைவு சமையல் கலைத் துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சமையல் கலையை விரும்பும் ரசிகர்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் விஜய் தெரிவித்துள்ளார்.