சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை! அதிகபட்சமாக 15 செ.மீ. மழை பதிவான பகுதி எது
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
21 Oct 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 21 Oct 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை! அதிகபட்சமாக 15 செ.மீ. மழை பதிவான பகுதி எது

சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை! அதிகபட்சமாக 15 செ.மீ. மழை பதிவான பகுதி எது

சென்னையில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் அதிகபட்சமாக 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் இன்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 26-ஆம் தேதி வரை ஆறு நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வரும் 23-ஆம் தேதி வங்கக்கடலில் மற்றொரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மழையின் தாக்கம் தொடர்ந்து நீடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இரவு முழுவதும் விட்டுவிட்டு கனமழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அதிக மழை பதிவான பகுதிகள்: கடந்த 24 மணி நேர மழைப்பதிவின்படி, எம்.ஜி.ஆர். நகரில் 15 செ.மீ. மழை பெய்துள்ளது. வடபழனியில் 14 செ.மீ. மழையும், சைதாப்பேட்டை, ஆலந்தூர் மற்றும் காஞ்சி கொளப்பாக்கத்தில் தலா 13 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. மேலும், மீனம்பாக்கம், மடிப்பாக்கம், வளசரவாக்கம், நுங்கம்பாக்கம், மதுரவாயல் மற்றும் குமரி மாவட்டத்தின் குளச்சல் ஆகிய பகுதிகளில் தலா 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.