சென்னையில் 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை; அதிகாலை முதல் விசாரணை தீவிரம்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

21 Jul 2026 www.thinathulir.com

சென்னையில் 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை; அதிகாலை முதல் விசாரணை தீவிரம்

சென்னையில் 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை; அதிகாலை முதல் விசாரணை தீவிரம்

சென்னையில் இன்று அதிகாலை முதல் இரண்டு வெவ்வேறு இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக, தேனாம்பேட்டையில் வசித்து வரும் ஓய்வுபெற்ற வட்டார போக்குவரத்து அலுவலர் (ஆர்டிஓ) ஒருவரின் இல்லத்தில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடன், திருவொற்றியூரில் உள்ள தொழிலதிபர் முருகேசன் என்பவரின் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த நடவடிக்கைக்கு மத்திய பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.சட்டவிரோத பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.