சென்னையில் 11-ந் தேதி பிரதமர் மோடி ‘ரோடுஷோ’
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
05 Oct 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 05 Oct 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

சென்னையில் 11-ந் தேதி பிரதமர் மோடி ‘ரோடுஷோ’

சென்னையில் 11-ந் தேதி பிரதமர் மோடி ‘ரோடுஷோ’

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வருகிறார். அப்போது பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான 14.64 கிலோமீட்டர் தூர மெட்ரோ ரெயில் சேவையை அவர் தொடங்கி வைக்க உள்ளார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, அவருக்கு பா.ஜ.க. சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கட்சியினர் பெருமளவில் திரண்டு பிரதமரை வரவேற்க திட்டமிட்டுள்ளனர். மெட்ரோ ரெயில் தொடக்க விழாவில் முதலமைச்சர் விஜய்யும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியும், முதலமைச்சர் விஜய்யும் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதையொட்டி போரூர், நந்தம்பாக்கம், சென்னை ஐ.ஐ.டி. உள்ளிட்ட பகுதிகளில் பிரதமருக்கு வரவேற்பு அளிக்க பா.ஜ.க.வினர் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு இடத்திலும் 3 மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியினரை திரட்டி வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான கட்சியினரை கட்சி கொடிகளுடன் திரட்டி, பிரதமரை வரவேற்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. போரூரில் நடைபெறும் நிகழ்ச்சிக்குப் பிறகு பிரதமர் மோடி காரில் சென்னை ஐ.ஐ.டி.க்கு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் செல்லும் பாதையின் இருபுறமும் திரண்டு நின்று வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. சைதாப்பேட்டை சின்னமலை முதல் கிண்டி வழியாக சென்னை ஐ.ஐ.டி. வரையிலான சுமார் 1.5 கிலோமீட்டர் தூரத்தில் சாலையின் இருபுறமும் கட்சியினரும் பொதுமக்களும் திரண்டு பிரதமரை வரவேற்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். மேலும், பிரதமர் செல்லும் வழித்தடத்தை நேரில் பார்வையிட்டு, எந்தெந்த பகுதிகளில் எத்தனை பேரை திரட்டி வரவேற்பு அளிப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.