சென்னையில் 103 இடங்களில் மருத்துவ முகாம்கள்: காய்ச்சல் பாதிப்பைத் தடுக்க மாநகராட்சி நடவடிக்கை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
21 Oct 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 21 Oct 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

சென்னையில் 103 இடங்களில் மருத்துவ முகாம்கள்: காய்ச்சல் பாதிப்பைத் தடுக்க மாநகராட்சி நடவடிக்கை

சென்னையில் 103 இடங்களில் மருத்துவ முகாம்கள்: காய்ச்சல் பாதிப்பைத் தடுக்க மாநகராட்சி நடவடிக்கை

சென்னையில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், காய்ச்சல் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில் மாநகராட்சி சார்பில் 103 இடங்களில் மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. திருவொற்றியூர் பகுதியில் சில இடங்களில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவது மாநகராட்சி ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, சென்னையின் 15 மண்டலங்களிலும் வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் வகையில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் மருத்துவர்கள் மூலம் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காய்ச்சல் அறிகுறிகள் தென்படுபவர்கள் அருகிலுள்ள மருத்துவ முகாம்களை அணுகி மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.