சென்னை சென்ட்ரலில் இருந்து மேற்கு வங்க மாநிலம் ஹவுரா செல்லும் சூப்பர்பாஸ்ட் மெயில் ரெயில் 11 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரெயில் எண் 12840 கொண்ட சென்னை சென்ட்ரல் – ஹவுரா சூப்பர்பாஸ்ட் மெயில் ரெயில், இன்று (அக். 29) இரவு 7 மணிக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், விசாகப்பட்டினம் ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட ஜடுபுடி – இச்சாபுரம் இடையே அமைந்துள்ள 1052-வது பாலத்தில், அபாய அளவைத் தாண்டி தண்ணீர் செல்வதால் ரெயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதன்படி, இன்று இரவு புறப்பட வேண்டிய இந்த ரெயில், நாளை (அக். 30) காலை 6 மணிக்குச் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.