சென்னை விமான நிலைய நிர்வாகத்தை மாற்றக் கோரி பிரதமருக்கு முதல்-அமைச்சர் விஜய் கடிதம்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

19 Sep 2026 www.thinathulir.com

சென்னை விமான நிலைய நிர்வாகத்தை மாற்றக் கோரி பிரதமருக்கு முதல்-அமைச்சர் விஜய் கடிதம்

சென்னை விமான நிலைய நிர்வாகத்தை மாற்றக் கோரி பிரதமருக்கு முதல்-அமைச்சர் விஜய் கடிதம்

சென்னை விமான நிலையத்தின் நிர்வாகத்தை வேறு நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், சென்னை விமான நிலையத்தின் தற்போதைய செயல்பாடுகளில் காணப்படும் சில குறைபாடுகள் குறித்து தமிழக அரசு அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விமான நிலைய நிர்வாகத்தில் மாற்றம் தேவை என்ற நிலைப்பாட்டை அரசு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் விஜய் எழுதியதாக கூறப்படும் அந்தக் கடிதத்தில், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணி மாநிலமாக விளங்கி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தொழில் மற்றும் முதலீட்டு வளர்ச்சிக்கு சர்வதேச தரத்திலான விமான நிலைய கட்டமைப்பும், சிறப்பான நிர்வாகமும் அவசியம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் எண்ணிக்கை, விமானங்களின் இயக்கம் மற்றும் சரக்கு கையாளும் திறன் ஆகிய மூன்று முக்கிய அம்சங்களிலும் சென்னை விமான நிலையம் மேலும் மேம்படுத்தப்பட வேண்டும் என கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிக அளவில் தொழில் முதலீடுகளை ஈர்த்து வரும் தமிழ்நாட்டின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் சென்னை விமான நிலையம் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம் என்பதால், தற்போதைய ஆபரேட்டரான இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தை (AAI) மாற்றி, வேறு ஒரு ஆபரேட்டரை நிர்வாகத்தில் கொண்டுவர வேண்டும் என தமிழக அரசு கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை விமான நிலையத்தின் ஆபரேட்டரை மாற்ற வேண்டும் என்ற தமிழக அரசின் இந்த நடவடிக்கை, விமான நிலைய நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியாக பார்க்கப்படுவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட முடிவு செய்துள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாகவே சென்னை விமான நிலைய நிர்வாகத்தை மாற்றுவதற்கான இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.