சென்னை மெட்ரோ ரெயில்களில் ஆகஸ்ட் மாதத்தில் 1.04 கோடி பேர் பயணம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
01 Sep 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 01 Sep 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

சென்னை மெட்ரோ ரெயில்களில் ஆகஸ்ட் மாதத்தில் 1.04 கோடி பேர் பயணம்

சென்னை மெட்ரோ ரெயில்களில் ஆகஸ்ட் மாதத்தில் 1.04 கோடி பேர் பயணம்

சென்னையில் பொதுப் போக்குவரத்தில் மெட்ரோ ரெயில் சேவைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பஸ் மற்றும் புறநகர் ரெயில் சேவைகளுடன் மெட்ரோ ரெயிலும் நகரின் முக்கிய போக்குவரத்து வசதியாக இருந்து வருகிறது. மேலும், புதிய வழித்தடங்களில் மெட்ரோ சேவையை விரிவுபடுத்துவதற்கான பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சென்னை மெட்ரோ ரெயில்களில் மொத்தம் 1 கோடியே 4 லட்சத்து 4 ஆயிரத்து 98 பேர் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.ஆகஸ்ட் மாதத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 14-08-2026 அன்று 4 லட்சத்து 1 ஆயிரத்து 607 பேர் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.பயணச்சீட்டு பயன்பாட்டைப் பொறுத்தவரை, சிங்கார சென்னை அட்டை (தேசிய பொது இயக்க அட்டை) மூலம் 52 லட்சத்து 84 ஆயிரத்து 196 பேரும், பல்வேறு QR குறியீடு அடிப்படையிலான பயணச்சீட்டு முறைகள் மூலம் கணிசமான எண்ணிக்கையிலான பயணிகளும் மெட்ரோ ரெயில்களைப் பயன்படுத்தியுள்ளனர்.QR குறியீடு மற்றும் டிஜிட்டல் பயணச்சீட்டு முறைகளில், Single Journey Paper QR மூலம் 20 லட்சத்து 20 ஆயிரத்து 687 பேரும், Online QR மூலம் 1 லட்சத்து 56 ஆயிரத்து 385 பேரும், Static QR மூலம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 732 பேரும் பயணம் செய்துள்ளனர். இதேபோல், WhatsApp மூலம் 4 லட்சத்து 69 ஆயிரத்து 198 பேரும், Paytm மூலம் 3 லட்சத்து 9 ஆயிரத்து 569 பேரும், ONDC மூலம் 12 லட்சத்து 47 ஆயிரத்து 168 பேரும், PhonePe மூலம் 2 லட்சத்து 73 ஆயிரத்து 438 பேரும் பயணம் செய்துள்ளனர்.மேலும், CMRL Mobile App (SVP) மூலம் 1 லட்சத்து 4 ஆயிரத்து 251 பேரும், Chennai One App மூலம் 3 லட்சத்து 10 ஆயிரத்து 474 பேரும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.Digital SVP, QR குறியீடு பயணச்சீட்டு, WhatsApp, Paytm, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை உள்ளிட்ட முறைகளைப் பயன்படுத்தி மெட்ரோவில் பயணம் செய்வோருக்கு 20 சதவீத கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், மெட்ரோ நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு கவுண்டர்களில் வாங்கப்படும் ஒற்றைப் பயணத்திற்கான காகித QR பயணச்சீட்டுகளுக்கு இந்தத் தள்ளுபடி பொருந்தாது.மெட்ரோ ரெயில்கள் மற்றும் நிலையங்களைப் பராமரிப்பதில் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கி வரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது.